If You Want More Stills..

Enter your email address:

Delivered by FeedBurner

TAMIL SEARCH

CLICK THIS.....

Tuesday, February 24, 2009

Rahman with Oscar Award Stills







Background Music

Background
Academy Awards, popularly known as Oscars, is an annual award ceremony. Awards are given to recognize excellence and contribution to film making around the world.

The first Oscar Award ceremony was held on May 16, 1929 at Hotel Roosevelt in Hollywood.

The 81st Academy Awards were given on February 23 in Los Angeles. Danny Boyle directed Slumdog Millionaire won eight out of the 10 nominations.

AR Rahman created history by becoming the first Indian to bag two Oscars.

Music director A R Rahman created

Feb 22, 2009: Music director A R Rahman created history after he became first Indian to win two Oscars for the film Slumdog Millionaire at the 81st Academy Awards ceremony held in Los Angeles on Sunday.

Rahman made the country proud by winning in the categories for best original score and best original song Jai Ho.

Earlier, he became the first Indian to win the British Academy (Bafta) Awards in the music category.

Rahman also won the Golden Globe Award for Slumdog Millionaire.

The film Slumdog Millionaire directed by Danny Boyle had a sweeping victory at the awards ceremony after it won eight Oscars out of 10 nominations.

The categories in which Slumdog Millionaire won the coveted award include best picture, best direction, best original score, best original song, best sound mixing, best film editing, best adapted screenplay and best cinematography.

It was an historic moment for another Indian Resul Pookutty as he won an Oscar for best sound mixing. He shared the trophy with Ian Tapp and Richard Pryke.

Slumdog Millionaire is a story of Mumbai-based boy's journey from rags to riches by winning a game show.

Earlier, the film won prestigious Golden Globe Awards, seven British Academy (Bafta) Awards and Critic's Choice Award in California.

Golden Global Award...


இசையும் ஏ ஆர் ரகுமான்.

90களின் தொடக்கத்தில் தமிழ் திரை இசை உலகிற்கு அறிமுகமான இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், ஸ்லம்டாக் மில்லியனர் என்ற பிரிட்டீஸ் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் கோல்டன் குளோப் என்ற விருதை பெற்றுள்ளார். இதை தமிழன் என்ற முறையிலும், இந்தியன் என்ற முறையிலும் பெருமிதம் கொள்ளும் ஒன்றாக ஊடகங்கள் பெருமைப்படச்சொல்கின்றன. இலங்கையில் கொத்துக்குண்டுகள் மூலம் தமிழர்களின் உயிரும் உடமையும் குதறப்பட்டுக்கொண்டிருக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியும், ரகுமானின் குளோப் விருதும் பெருமிதம் கொள்ளும் உணர்வாக முன்னிருத்தப்படுகின்றன. இது ஒரு புறமெனில் மறுபுறம் இப்படம் இந்தியாவை கேவலப்படுத்துவதாக சில அறிஞர்கள்(!) கொதிக்கிறார்கள். சிலர் வழக்குத்தொடுத்திருக்கிறார்கள். தான் ஆராதிக்கும் ஒரு நடிகனின் கையெழுத்தைப்பெற மலத்தில் புறண்டெழுவதும், சேரிகளின் அவலத்தைக்காட்டுவதும் இந்தியாவை கேவலப்படுத்துவதாகும் என்றால், சேரிகளை இன்னும் சேரிகளாகவே வைத்திருப்பதும், ஒரு பிரிவு மக்கள் தாங்கள் வாழ்வதற்காக மலத்தோடு உழன்றுகொண்டிருப்பதும் இந்தியாவிற்கு அவமானமாக தெரியவில்லையா? என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் சொல்லவும் மாட்டார்கள். ஒரே இரவில் ஏழை கோடீஸ்வரனாகும் கோடம்பாக்கத்துக்குப்பையை ஆங்கிலத்துடைப்பத்தால் வாரியதால் ஆஸ்காரை வெல்லும் என்று இப்போதிருந்தே ரசிகர்கள் கொண்டாடக் காத்திருக்கிறார்கள்.

பொதுவாக இசை என்பது எல்லாத்தட்டு மக்களாலும் ரசிக்கப்படக்கூடியதாகவும், விரும்பக்கூடியதாகவும் இருக்கிறது. இசை என்றால் பரவலாக அது திரைஇசையையே குறிக்கும். அவ்வாறல்லாமல் திரைப்படமல்லாத இசைப்பாடல்களும் அவ்வப்போது வந்ததுண்டு. இசையை ரசிப்பதாக குறிப்பிட்டாலும் அது பாடலை உள்ளடக்கியதாகவே இருக்கும். இப்படி திரைப்பட இசையானாலும், அதற்கு வெளியிலிருந்து வந்த இசையானாலும் அவை இரண்டு நோக்கங்களை கொண்டிருக்கும். மக்களுக்கு இசையின் மேலுள்ள மோகத்தை பயன்படுத்தி அவர்கலை அந்த மயக்கத்திலேயே தக்கவைப்பதற்கும், அதன் மூலம் இசைத்தட்டு விற்பனையை கூட்டி லாபம் பார்ப்பதற்கும். தங்களின் வாழ்வில் நேரடியாக கண்ட அனுபவங்களை அறிவாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான கருவியாக இசையும் ராகங்களும் தோன்றின. பின்னர் உழைப்பின் பயன் உழைப்பவர்களுக்கு கிடைக்காமல் போனபோது உழைப்பின் மீது ஏற்ப்பட்ட சலிப்பைப்போக்கும் போதையாக பொழுதுபோக்காக உழைப்பை அபகரித்தவர்களால் முன்வைக்கப்பட்டது. இன்றுவரை அதுவே பல்வித வடிவமாற்றங்களுக்கு உள்ளாகி ஆனால் உள்ளடக்கம் மாறாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமன்றி பலகோடிகளை ஈட்டித்தரும் இசைச்சந்தையாகவும் இன்று உருவெடுத்து நிற்கிறது. அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சோனி நிருவனம் தயாரித்து ஏஆர் ரகுமான் இசையமைத்து பாடி வெளியிட்ட வந்தேஏஏ மாட்ரம் எனும் (இந்து வெறி) தேசபக்தி இசை பத்து லட்சம் குறுந்தகடுகள் விற்கப்பட்டன. இசை என்னும் மயக்கம் அந்த பார்பனிய பாடலை பொழுது போக்கு என்னும் வடிவில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு மட்டுமன்றி பலகோடி லாபத்தையும் குவித்தது. இந்தவகையில் இளையராஜாவின் திருவாசகமும் அடக்கம். மக்களை கருக்கும் நச்சுச்சிந்தனைகளை கலையின் வடிவங்களாகவும், பொழுது போக்காகவும் கொள்பவர்களும், கொண்டாடுபவர்களும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும், போராடத்தூண்டும் பாடல்களை பிரச்சாரப்பாடல் என ஒதுக்குவது வேடிக்கையானது.

தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று பல படங்களுக்கு இசையமைத்திருந்தும் (ஸ்லம் டாக் மில்லியனரை விட சிறப்பாக சில படங்களுக்கு இசையமைத்திருப்பதாக அவரது இசை ரசிகர்கள் கூறுகிறார்கள்) ஸ்லம் டாக்கின் இயக்குனர் டானி பெய்லேவின் முக்கியத்துவம்விருதுக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தேவைப்பட்டதாக கூறப்பட்டாலும், அமெரிக்க நாளிதழ்கள் இந்தப்படத்தையும் இசையையும் கொண்டாட்டம் என வர்ணித்து கட்டுரைகள் வெளியிடுவதற்கு பின்ன‌ணியிலுள்ள எண்ணம் வேறானது. இந்தியாவில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் வடமாநிலங்களிலும் சேர்த்து ஆண்டொன்றுக்கு தோராயமாக 600 படங்களுக்கும் அதிகமாக வெளியாகின்றன. இவற்றின் பாடல்களுக்கும். திரைப்படமல்லாத பாடல்களுக்கும் இந்தியாவில் மிகப்பெரிய சந்தை இருக்கிறது. இவற்றை சில உள்நாட்டு நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் ஓரளவு அறிமுகமான ஏஆர் ரகுமானின் இசைக்கு விருது வழ்ங்குவதன் மூலமும், அதைப்புகழ்ந்து கட்டுரைகள் வெளியிடுவதன் மூலமும் அந்த இசைச்சந்தையை கைப்பற்ற களத்தில் குதித்திருக்கின்றன. ஏஆர் ரகுமானின் மேற்கத்திய பாணி இசையமைப்பு இந்திய ரசிகர்களை ஏற்கனவே அதற்கு தயார்படுத்தி வைத்திருக்கிறது. தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு அழகிப்பட்டம் வழ‌ங்கியதன் மூலம் அழகு சாதனப்பொருட்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்ததையும், திரையரங்குகளை பெரும் நிறுவனங்கள் கைப்பற்றிவருவதையும் இந்த இடத்தில் நினைவு கூர்ந்து பாருங்கள். மேற்கத்திய இசைக்குப்பைகளையும், உணர்வற்ற கூச்சல்களையும், இந்தியச்சந்தையில் கொட்டி மக்களின் உழைப்பை மேலும் சுரண்ட கூரிய நகங்களுடன் காத்திருக்கின்றன அவைகள்.

”திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா” போன்ற பாடல்களை (தாஜ்மஹால் ஏஆர் ரகுமான்) இசையாகவும் கலை வடிவமாகவும் ரசிக்கும் மக்கள் “மக்கள் ஆயுதம் ஏந்துவது சொல்லம்மா வன்முறையா?” (மகஇக வெளியீடு) போன்ற பாடல்களை வன்முறை என்றும் பிரச்சாரப்பாடல்கள் என்றும் ஒதுக்குவது அவர்களை அவர்களே அழித்துக்கொள்வதற்குத்தான் துணைபோகிறது என்பதை உணரவேண்டும். அப்படி உணர்ந்து கொள்ளும் போது எது இசை என்பதை புறிந்து கொள்வதோடு, தினம் தினம் நம்மைச்சுற்றி மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கையில் இசை ஒரு பொருட்டல்ல எனும் இங்கிதத்தையும் தெரிந்து கொள்ளமுடியும்.

ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்த `ஸ்லம்டாக் மில்லினர்' படம் சர்வதேச அளவில் விருதுகளை வாரி குவிக்கிறது. ஏ.ஆர். ரகுமானுக்கும் சிறந்த இசை யமைப்பாளருக்கான விருது

ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்த `ஸ்லம்டாக் மில்லினர்' படம் சர்வதேச அளவில் விருதுகளை வாரி குவிக்கிறது. ஏ.ஆர். ரகுமானுக்கும் சிறந்த இசை யமைப்பாளருக்கான விருது கள் குவிகின்றன. இப்படம் மூலம் 3 ஆஸ்கார் விருது களுக்கு அவர் பரிந்துரைக் கப்பட்டுள்ளார். நிச்சயம் ஒரு விருதேனும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக் கிறார். வருகிற 22-ந்தேதி விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் ஆஸ்கார் விருது சிபாரிசினால் ஏ.ஆர். ரகுமானுக்கு வெளிநாடு களில் புதிய ரசிகர்கள் உரு வாகியுள்ளனர். அவரது பாடல் சி.டி.க்களை போட்டி போட்டு வாங்கி குவிக்கின்ற னர்.

ரசிகர்கள் ஆர்வத்தை அறிந்து அமெரிக்காவில் உள்ள ஒரு கேசட் கம்பெனியில் ஏ.ஆர். ரகுமான் பாடல்களை தொகுத்து சி.டி. ஆல்பமாக வெளியிட்டு உள்ளது. அவை அமோக விற்பனையாகின்றன.

ரகுமான் இதுவரை 150-க் கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் ரோஜா படத்தில் இடம் பெற்ற சின்ன சின்ன ஆசை, காதல் ரோஜாவே உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ஹிட்டாயின. ஜென்டில்மேன், திருடா திருடா, காதலன், பம்பாய், மின்சார கனவு, அலை பாயுதே, ஜீன்ஸ், முதல்வன், இந்தியன், தெனாலி, முத்து, காதலர் தினம், காதல் தேசம், ரட்சகன், ஸ்டார், தாஜ்மஹால், படையப்பா படங்களின் பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.

இந்தியில் ஜோதா அக்பர், லகான், கஜினி என பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இப்படங்களின் பாடல்கள் ஆஸ்கார் விருது சிபாரிசால் மேலை நாட்டவரையும் போய் சேர்ந்துள்ளது.
ஏ.ஆர் ரகுமான் படம் போட்ட சட்டைகள், டி-செட்டுகள் கூட விற்பனையில் சூடு பிடித்துள்ளது.

ஆஸ்கார் விருதுகள் தாய் நாட்டுக்கு சமர்ப்பணம்: ஏ.ஆர்.ரகுமான்

இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று, புதிய சாதனைப் படைத்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இந்த விருதுகளை தனது தாய்நாட்டுக்கு சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைப்பெற்று வருகிறது.

இதில், 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தி‌ற்கு இசையமை‌‌த்த ஏ.ஆர்.ரகுமான், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான இசையமைப்பாளர் ஆகிய இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று, சாதனை படைத்துள்ளார்.

இந்த விருதுகளை பெற்றது குறித்து ஏ.ஆ‌ர்.ரகுமா‌ன் கூறுகையில், "மூன்று வாரங்களில் 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்துக்கு இசையமைத்து முடித்தேன். லண்டனுக்கு சென்று இந்த பணியை செய்தேன். தற்போது இரட்டை ஆஸ்கார் விருது கிடைத்திருப்பது, இன்னும் பெரிய அளவில் நான் செயல்படுவதற்கு உதவும் என்று கருதுகிறேன்" என்றார்.

"இந்த இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் எனது தாய் நாட்டுக்கு சமர்பிக்கிறேன்" என்று மேலும் கூறினார் அவ‌ர்.

இரட்டை ஆஸ்கார் விருது பெறும் முதல் இந்தியர் ஏ.ஆர்.ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.

Oscar...


ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 ஆஸ்கார் விருதுகள்!

தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான இசையமைப்பாளர் ஆகிய இரண்டு பிரிவுகளில் வென்று, இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

உலகளவில் திரையுலகினருக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்திய தொழில்நுட்பக் கலைஞர்கள் பெருமளவில் பங்கேற்ற ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படம் மொத்தம் 10 பிரிவுகளில் போட்டியிட்டது.

இப்படத்தில் இசையமைத்த தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான இசையமைப்பாளர் ஆகிய 2 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த இரண்டு பிரிவுகளிலும் வென்று, இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.


இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டதும் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் மேடையேறிய ஏ.ஆர்.ரகுமான், விருதை பெற்றபோது 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசினார்.

இதன்மூலம் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் கூடுதல் பெருமை சேர்த்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

Free Subscribe Get More...